23 May 2018

உங்க வீீடு.....


டிரிங்…. டிரிங்…..
‘‘ஹலோ’’
‘‘சார்…. உங்க பேர் பாலகுமார்தானே….?’’
‘‘ஆமா… நீங்க?’’
‘‘நாங்க XXXXX பேங்கில இருந்து பேசுறோம்’’
‘‘சரிங்க சொல்லுங்க…’’
‘‘சார் நாங்க பெர்ஷனல் லோன் ஆபர் பண்றோம்…. உங்களுக்கு ஏதாவது தேவை இருக்கா சார்?’’
‘‘ம்ம்ம்ம்ம்….. ஆமா தேவை இருக்கு!’’
‘‘உங்களுக்கு எவ்வளவு லோன் சார் தேவைப்படுது?’’
‘‘எனக்கு வீட்டுக்கு ஒரு ரெண்டு, காருக்கு ஒரு ஒன்றரை, செலவுக்கு ஒரு…. ஒண்ணு….. எப்படியும் 4 லட்சம் தேவைப்படுது’’
‘‘ஓகே… குட் சார்…. நாங்க 16 பெர்ஷன்ட் இன்ஸ்ட்ரட்டில லோன் குடுக்கிறோம்….. நீங்க ஒர்க் பண்றீங்களா? பிஸ்னஸ் பண்றீங்களா?’’
‘‘நான் தனியா தொழில் பண்றேங்க…’’
‘‘குட் சார்… உங்க இன்கம் எவ்வளவு சார்?’’
‘‘00000’’
‘‘ஓகே குட் சார்…. 5 வருஷம் வரைக்கும் நாங்க இஎம்ஐ ஆபர் பண்றோம் சார்… உங்களுக்கு எத்தனை வருஷம் போடட்டும் சார்…?’’
‘‘எனக்கு ஒரு எட்டு வருஷம் குடுத்தீங்கண்ணா நல்லாயிருக்கும்’’
‘‘இல்ல சார் அதிகபட்சமா எங்க பேங்கில 5 வருஷம்தான் இஎம்ஐ பிரியட்’’
‘‘சரி அப்படியே போட்டுக்கங்க…’’
‘‘சார் லோன் பிராசசிங் பீஸ்…. 1 பெர்ஷன்ட் சார். நீங்க செக்கா தர்றீங்களா?  கேஷா தர்றீங்களா?’’
‘‘என்னால அவ்வளவு பெரிய அமவுன்ட் எல்லாம் தர முடியாதும்மா’’
‘‘இல்லே… சார்… இது எல்லார்கிட்டேயும் வசூலிக்க நாமினல் பீஸ்தான் சார்’’
‘‘இல்லம்மா என் கிட்ட அவ்வளவு அமவுண்ட் இல்ல’’
‘‘சரி… கொஞ்சம் இருங்க சார் என் சீனியர்கிட்ட பேசிட்டு சொல்றேன்…. லைன்லேயே இருங்க…..’’
‘‘……..’’
‘‘சார்…. லைன்ல இருந்தமைக்கு மி்க்க நன்றி.. எங்க சீனியர் உங்களுக்காக 0.5 பெர்ஷன்ட் மட்டும் வசூலிச்சா போதும்னு சொல்லிட்டார்’’
‘‘உங்களால மாசத்துக்கு அதிகபட்சமா எவ்வளவு சார் இஎம்ஐ கட்ட முடியும்?’’
‘‘செலவு போக மிச்சம் இருக்கிற ஒரு 10 ரூபா கட்டிடுவேன்’’
‘‘சரி சார்… அதுக்கு ஏத்த மாதிரி இஎம்ஐ கால்குலேட் பண்ணி வச்சிடுறேன். உங்க பெர்மனன்ட் அட்ரஸ் சொல்லுங்க சார்..’’
‘‘சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டு முன்னாடி திரும்பி ரோட்டுப்பக்கம் வந்தா முதல் வீடு எங்க வீடுதான்’’
‘‘ஹாட் ஆப் தி சிட்டியில இருக்கீங்க…… வாழ்த்துக்கள் சார்…’’
‘‘சார் நீங்க எவ்வளவு இஎம்ஐ கட்ட முடியும்னு சொன்னீ்ங்க… மறந்துட்டேன்’’
‘‘மாசத்துக்கு ஒரு 10 ரூவா…..’’
‘‘ஓகே சார்… எங்க ரெபரசென்டேட்டீவ் உங்க வீட்டுக்கு வருவார்… உங்களோட வீட்டு டோர் நம்பர், அட்ரஸ் கரெக்ட்டா சொல்லுங்க சார்’’
‘‘அது தான் சொன்னேனம்மா….. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டு ரோட்டுப் பக்கம் வந்தா முதல் வீடு என்னோடதுதான்’’
‘‘அது சரி சார்… டோர் நம்பர், அட்ரஸ் கரெக்ட்டா இல்லா ரெபரசன்டேட்டீவ் வர முடியாதே சார்….’’
‘‘என் வீட்டுக்கு இன்னும் டோர் நம்பர் தரலம்மா’’
‘‘ஓ… புது வீடு கட்டியிருக்கீங்களா?’’
‘‘இல்லம்ம ரொம்ப வருஷமா இருக்கோம்…. படுபாவிங்க இன்னமும் டோர் நம்பர் தர மாட்டேங்கிறானுங்க…..’’
‘‘ஓ… அன்அப்ரூவ்டு லேண்ட்டா இருக்கும் சார்…’’
‘‘சரி சார் பக்கத்தில லேண்ட் மார்க் ஏதாவது சொல்லுங்க’’
‘‘அப்படின்னா’’
‘‘ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க சார்’’
‘‘என் பக்கத்து வீடு கபாலியோட குடிசை…… பீச்சாங்கை பக்கம் அலமேலுவோட வீடு’’
‘‘என்ன சார்….. சொல்லுறீங்க குடிசை வீடா?’’
‘‘ஆமா…’’
‘‘சார் நீங்க என்ன தொழில் பண்றீங்க?’’
‘‘நான் காலையில எழுந்து திருவள்ளூர் ரயில்ல பிச்சை எடுக்க கிளம்பினா…. ராத்திரி தான் வீட்டுக்கு வருவேன்’’
‘‘என்னது பிச்சையா?’’
‘‘ஆமாம்மா…. எப்படியும் மாசத்துக்கு ஒரு பத்து ரூவா மிஞ்சும்…. இப்ப எல்லாம் யாருமா… அதிகமா பிச்சை போடுறாங்க…. எல்லாம் விரட்டிவிடத்தான் பார்க்கிறாங்க…. நீங்க தான் ரொம்ப அனுசரணையா பேசி 4 லட்சம் வரைக்கும் எனக்கு லோன் தர முன்வந்திருங்கீங்க….. சரி சொல்லுமா…. உங்க அப்ரெசென்ட்டேடீவ் எப்ப வருங்வாங்க?’’
அடுத்த முனையில் கொர் சத்தம்தான் கேட்டது.
தினமும் போன் பண்ணி லோன் வேணுமான்னு கேட்டா….. எரிச்சல்ல இப்படித்தான் பண்ணத்தோணுது….. கொய்யால இனிமே கேட்பீங்க?