நதியா பிளஸ் 4 - பாகம் 3

நதியாதான் வந்திருப்பாள் என்று நினைத்து கதவை திறந்த சந்திரனுக்கு, என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் அவன் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடிக்கப்பட்டது.
அவனது கைகளை தனது தோளில் போட்டுக் கொண்டபடி, படுக்கையில் படுக்க வைத்தான் ஓம்பிரகாஷ்.
‘‘ஏண்டா… ஊரான் விட்டு பொண்டாட்டிய நாங்க கஷ்டப்பட்டு வளைச்சு பட்டா போட்ட வச்சா… நீங்க ஈசியா வந்து கொத்திட்டு போவீங்களோ?... அதுதாண்டா உன்னை போடுறதுக்கு சமயம் பார்த்துட்டு இருந்தேன். மவனே நீயா வந்து சரியா மாட்டினே… சம்மதிச்சா நதியாவை விட்டுறது… இல்லேன்னா அவளையும் போட்டுத் தள்ளுறதுன்ற பிளான்ல தாண்டா இருந்தேன். சரியா நீ இந்த ஏரியாவில வர்றத பார்த்துட்டு, என் ஆளு தகவல் சொன்னான்’’
‘‘உன்னை எல்லாம் சும்மா விடக்கூடாதுடா… நினைச்சாலே வயிறு எரியுதுடா… நான் கஷ்டப்பட்டு பிடிச்ச நதியாவோட மனசை மாத்த்திட்டியேடா… எங்கே அவ?’’ என்று சந்திரனை படுக்கையில் போட்டுவிட்டு, நதியாவை தேடினான். ஆனால், அவள் எங்கும் இல்லாததால் நிம்மதி அடைந்தான்.
‘‘இவன் மட்டும்தான் இருந்துள்ளான். அப்படின்னா… அவ ஊருல இல்லை. அம்மா வீட்டுக்கு போயிருக்கணும். இவன் குவாட்டரை கொண்டு வந்திருக்கிறப்போவே தெரியுது…. ஏன்னா நதியாவுக்குத்தான் தண்ணியடிச்சா பிடிக்காதே. சோ… நம்ம வேலை இன்னும் ஈசியா முடியப்போவுது’’ என்று நினைத்துக் கொண்டான்.
சட்டை பையில் இருந்த பாத் சால்ட் பாக்கெட்டை எடுத்து, சில்வர் பாயிலில் வைத்து லைட்டரால் உருக்கினான். அதை இன்ஜெக்‌ஷனில் எடுத்து சந்திரனின் உடலில் செலுத்தினான். நடப்பது எதுவும் தெரியாமல், போதை மருந்து விளைவினால் ராஜமயக்கத்துக்கு சென்றான் சந்திரன்.
அவனை அப்படியே கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு சென்று தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டான். கதவை பூட்டிவிட்டு, கிளம்பினான்.
ஊருக்கு வெளிப்புறத்தில் இருந்த கிணற்றில் அவனை தள்ளிவிடுவதுதான், ஓம்பிரகாஷின் திட்டம். போதையில் கிணற்றில் விழுந்தால் மூச்சுத் திணறி சாக வேண்டியதுதான். சாவது கூட தெரியாமல், போய் சேர வேண்டியதுதான்.
கார் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.
தூரத்தில் ஒரு செங்கல் சூளை எரிந்து கொண்டிருப்பது, இரவு நேரத்தில் தெளிவாகத் தெரிந்தது. சட்டென மின்னல் வேகத்தில் ஓம்பிரகாஷின் மனதில் ஒரு யோசனை உதித்தது.
அப்படியே செங்கல் சூளைக்கு அருகே வண்டியை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று பார்த்தான். அங்கு ஒரே ஒரு காவலாளி மட்டும் இருந்தான். அவனும் தண்ணியடித்துவிட்டு, குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தான். பக்கத்தில் அவன் சாப்பிட்டுப்போட்ட மட்டரகமான மது பாட்டில் ஒன்று கிடந்தது. சூளைக்கு அருகில் யாருமே இல்லை. அக்கம், பக்கத்திலும் ஆள் நடமாட்டம் இருப்பதாக தெரியவில்லை.
உடனடியாக காரில் இருந்த சந்திரனை மீ்ண்டும் இழுத்துக் கொண்டு வந்தான். எழுந்தாலும் எழுந்துவிடுவான் என்று பயந்தததால் இன்னொரு டோஸ் போதை மருந்தை அவனுக்கு ஏற்றினான். பின்னர் சூளையின் முன்னே இருந்த விறகுகளை மட்டும் வெளியே எடுத்துவிட்டு, அவனை அப்படியே உயிருடன் உள்ளே தள்ளினான். பின்னர் விறகுகளையும் உள்ளே தள்ளினான்.
அங்கேயே ஒரு மணிநேரம் காரில் ஏசி போட்டு இருந்துவிட்டு, நிம்மதியாக நதியாவின் வீட்டுக்கு கிளம்பினான்.
அக்கம், பக்கத்தில் சப்தம் எல்லாம் அடங்கி நிசப்தமாக இருந்தது.
வீட்டுக்குள் நுழைந்து, டிவியை போட்டு மிட்நைட் மசாலாவை பார்க்க ஆரம்பித்தபோது, செல்போன் ஒலித்தது.
புது நம்பராக இருந்ததால், யாரென்று தெரியாமல் போனை ஆன் செய்தான்.
‘‘என்ன மாப்பிள்ளை யாரை போட்டுத் தள்ளிட்டே போலிருக்கே?’’ என்றது மறுமுனையில் இருந்தவரின் குரல்.
என்னதான் ஏரியா ரவுடியாக இருந்தாலும், அதை கேட்ட மாத்திரத்திலேயே உள்ளூர ஒரு பயம் ஒட்டிக் கொண்டது.
‘‘டேய் நீ யாருடா… என்னடா உளர்றே?’’ ஓம்பிரகாஷ் குரலில் மட்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான்.
‘‘மச்சி நீ பண்ணின எல்லாத்தையும் நான் பாத்திட்டேன். அதை செல்போன்ல படமும் பிடிச்சு வச்சிருக்கேன்… எனக்கு வேண்டியதை நீ் செஞ்சிட்டா உன்னை ஏன் நான் சீண்டப் போறேன்?’’
‘‘உனக்கு என்ன வேணும்?’’
‘‘அதை போன்லேயே சொல்ல முடியாது சேரி ரயில்வே ஸ்டேஷன் அவுட் போஸ்ட்டுக்கு வா’’ கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்தது மறுமுனை.
‘‘எவனா இருக்கும்…. போறதா வேண்டாமா…’’ ஆயிரம் யோசனைகள் வந்து சென்றன ஓம்பிரகாஷூக்கு.
தெளிவா வீடியோ எல்லாம் பிடிச்சு வச்சிருக்கான். அப்புறம் நம்ம ஏரியாவிலேயே நம்மை போட எந்த ரவுடியும் முடிவு செய்ய மாட்டான்.
அதனால போகலாம் என்று முடிவு செய்து கிளம்பினான்.
சேரி ஸ்டேஷன் அவுட் போஸ்ட்க்கு சென்று காத்திருந்தான். பார்வை தூரத்தில் இருந்த தண்டவாளத்தில் ரயில்கள் இந்தப்பக்கமும், அந்தப்பக்கமுமாக விரைந்துக் கொண்டிருந்தன.
இரவு நேரம் என்பதால், ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. பையில் இருந்த கத்தியை தொட்டு பார்த்துக் கொள்வதற்காக கையை பாக்கெட்டில் துழாவ முற்பட்டபோது, அவன் தலையில் பலமான அடிவிழுந்து மயங்கி சரிந்தான்.
(தொடரும்)
(மேலும் என்னுடைய படிப்புகளை படிக்க: https://anubavampalasu.blogspot.com)

No comments:

Post a Comment

Thanks